2021 ஜூலை 31, சனிக்கிழமை

கற்பிட்டி பஸ் தரிப்பிடத்தை புனரமைத்துத் தரமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

கற்பிட்டி நகரத்திலுள்ள பஸ் நிலையத்தினை நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையமாகப் புனரமைத்துக் கொடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்ற பொது பஸ் நிலையம், தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதுடன்,  மழை காலங்களில் நீர் நிரம்பியும் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இதனால் போக்குவரத்து செய்வதில் தாம் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே,  பஸ் நிலையத்தை உடனடியாக புனரமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .