2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கற்பிட்டி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலைகளின்  அபிவிருத்திகளுக்காக வடமேல் மாகாணசபையினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் கட்ட நிதியொதுக்கீடாக திகழி முஸ்லிம் வித்தியாலய 3 மாடி கட்டிடத்துக்காக 34 இலட்ச ரூபாவும்  ஆலங்குடா வித்தியாலயம் மற்றும் கண்டக்குழி வித்தியாலய வாசிகசாலை அமைப்பதற்காக தலா 35 இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின்  கோரிக்கைக்கமையவே இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .