Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாண விளையாட்டு வீரர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக வடமத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.
தேசிய ரீதியில் தங்களது விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணரும் விளையாட்டு வீரர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமை தொடர்பாக மாகாண அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே மாகாணத்தில் புலமைப் பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களின் புலமைப் பரிசிலுக்கான நிதியை வழங்கும் வகையில் நிதியமொன்றை ஆரம்பிக்குமாறு தனது அமைச்சின் அதிகாரிகளுக்கு மாகாண அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
03 Jul 2025