2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மூடப்பட்டுள்ள கொத்தான்தீவு வைத்தியசாலை வார்ட்தொகுதி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், முந்தல் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு கிராமிய வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வார்ட் தொகுதி திறந்து வைக்கப்பட்டபோதிலும் அவ்வார்ட் தொகுதி இயங்காமல் மூடிய நிலையிலுள்ளது.  

கொத்தான்தீவு கிராமிய வைத்தியசாலையில் வார்ட் தொகுதி கட்டி முடிக்கப்பட்டு  சுமார் 24 நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் கட்டில்கள் போடப்பட்ட நிலையில் திறந்துவைக்கப்பட்டிருந்தது.

இதனால் கொத்தான்தீவு கிராம மக்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு முந்தல் வைத்தியசாலைக்கு  வரவேண்டியுள்ளது.
எனவே, இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இக்கிராமிய வைத்தியசாலையின் வார்ட் தொகுதியை இயங்கச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .