2021 ஜூன் 14, திங்கட்கிழமை

முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவில் மிருகபலிகளை தடுத்தார் மேர்வின்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று  இடம்பெறவிருந்த மிருக பலிப்பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்து நிறுத்தியுள்ளார்.

முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வருடாந்த உற்சவத்தின்போது நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலிகொடுக்கப்படுவது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மிருகபலி பூஜை நடைபெறவிருந்த நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்றுடன் அவ்விடத்திற்கு வந்து மிருகங்கள்  பலிகொடுக்கப்படுவதை தடுத்தார்.

அமைச்சருடன் வந்தவர்கள் பலிகொடுக்கப்படவிருந்த மிருகங்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று சிலாபம் பொலிஸ் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.

ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்த இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலிகொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

'இது மத ரீதியான பிரச்சினை அல்ல. மிருகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையே இது. களினியிலும் இத்தகைய நடவடிக்கைகளை நான் தடுத்து நிறுத்தினேன். இப்போது நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் மிருக பலிகளையும் தடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன்' என செய்தியாளர்களிடம் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளியம்மன தேவஸ்தானத்தில் வருடாந்தம் இடம்பெறும் மிருக பலி பூஜையினை நடாத்துவதற்கு சிலாபம் மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த மிருக பலி பூஜை இன்று இடம்பெறவிருந்த நிலையிலேயே சிலாபம் நீதவான் ஆர். எம். ஜயவர்தன இந்த தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

புகைப்படங்களை பார்வையிட..

தொடர்புடைய செய்திகள்:

2) முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் மிருகபலியை தடுக்கக்கோரும் மனு மீண்டும் நிராகரிப்பு

1) முன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலய மிருகபலி வேள்வியை தடுக்கக் கோரும் மனு நிராகரிப்பு


  Comments - 0

 • lankan Thursday, 15 September 2011 02:22 AM

  மோட சில்வா

  Reply : 0       0

  Sujaan Tuesday, 13 September 2011 06:12 PM

  Dr . Marvin nenga ungada mathatha vidayathalu maddum thala idunga. why anaya mathathaverkalin manathai wathaikkiringa ? avarkalin kadamai purivathakku kuda thadaya? puriyalappa..,

  Reply : 0       0

  goodheart Tuesday, 13 September 2011 06:26 PM

  மாண்புமிகு அமைச்சரே!! இதன் பின்விளைவையும் சற்று சிந்தியுங்கள். மிருகங்கள் பலியிடுவதும் சாப்பிடுவதும் இன்று நேற்று செய்ததல்ல இது 1௦௦௦ வருடத்தையும் தாண்டி விட்டது. உங்கள் நடவடிக்கையின் விளைவு பின்விலய்வு நாட்டில் மிருகங்கள் குவியப்போகுது. தயாராக இருங்கள் மிருகங்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு.

  Reply : 0       0

  Mark Wilson Tuesday, 13 September 2011 07:33 PM

  மிருக பலி கூடாது.....அப்போ வடக்கில் போர் செய்து மனித பலி குடுத்தது?

  Reply : 0       0

  upali Tuesday, 13 September 2011 07:38 PM

  மிருகங்களுக்கு தமிழ் பேச தெரிந்திருந்தால் நீங்களே பலி கொடுத்திருப்பிங்க.

  Reply : 0       0

  Hot water Tuesday, 13 September 2011 08:03 PM

  மிருகபலி சரியானதா பிழையானாதா என்பது ஒருபுறமிருக்கட்டும். மற்றவர்களின் மத விடயங்களில் அந்த மதத்தைச் சாராதவர் இப்படி அடாவடியாக நடந்துகொள்வது நல்லதல்ல.

  Reply : 0       0

  avathane Thursday, 15 September 2011 06:24 AM

  எல்லோரும் இப்படி அவர் அவர் நினைத்ததை செய்தால் நீதிமன்றமும் பொலிஸும் எதற்கு?

  Reply : 0       0

  aj Tuesday, 13 September 2011 08:35 PM

  மிருக பலி கூடாது , வேட்டியை மடித்து கட்டிகொண்டு வந்துவிடுவார். ஆனால் மனித பலி வடக்கு கிழக்கில் செய்யலாம்?

  Reply : 0       0

  xlntgson Tuesday, 13 September 2011 09:04 PM

  மீட்டல் எளிது, பராமரித்தல் கடினம்! அதைத் தொழிலாகக் கொள்வோர் இலாபம் இல்லாவிட்டால் செய்யவியலாது தொடர்ந்தும், எதுவும் இலவசமாகக் கிடைக்காது இந்நாளில்!
  ஜீவ காருண்யம் என்று அவிழ்த்துவிட்டால் வேலை முடிந்து விட்டதா?
  கட்டாக் காலியாகத்திரியும், கவனிப்பார் யாருமில்லை!

  Reply : 0       0

  pasha Tuesday, 13 September 2011 09:07 PM

  அடுத்த நடவடிக்கை ஹஜ்ஜுப்பெருநாள் உல்ஹியா வை தடுப்பது. தொப்பி போட்டு அடையாள அட்டை எடுப்பது தடை வந்து விட்டது. அடுத்து குர்பான் தடை வரப்போகுது. நம்மட அரசியல்வாதிகள் எங்கே?

  Reply : 0       0

  asker Tuesday, 13 September 2011 10:01 PM

  ஆப்பு இருக்கின்றது ஹஜ் பெருநாள் அன்று ,......

  Reply : 0       0

  Rahumathulla Wednesday, 14 September 2011 03:33 AM

  Dr(? )மேர்வினுடைய அடாவடித்தனங்கள் எல்லை மீறிப்போய் கொண்டிருக்கின்றது. தட்டிக் கேட்க எமது அரசியல்வாதிகளுக்கு எங்கே தைரியம் வரப்போகிறது? மேலே துள்ளினால் நிச்சயம் கீழே விழத்தான் வேண்டும் !

  Reply : 0       0

  SK Wednesday, 14 September 2011 08:41 AM

  இந்த மிருகங்கள் பலி கொடுக்கா விட்டால் சாகமலா இருக்க போகிறது? அரசியல் லாபம் தேடிய பயணம் இது... நான் தெரிந்த மட்டில் இலங்கை என்கிற பௌத்த நாட்டில் சிங்கள பௌத்தர்களே கணிசமான அளவு மாமிசம் உண்ணுகிறார்கள்... எது எப்படியோ சிறுபான்மையினரை அட்சுறுத்துகின்ற கின்ன்ற ஒரு விடயமே இது... அடுத்த குறி கட்டாயமாக ஹஜ் பெருநாள் நேரம் காணலாம்... இவரை பா.ம உறுப்பினராக தேர்ந்து எடுத்ததற்கு வாழ்த்துக்கள்...

  Reply : 0       0

  rozan Wednesday, 14 September 2011 11:23 AM

  இது மேர்வின் உடைய செயல் அல்ல..... மாறாக பெரிய இடத்தினுடைய ஓடர் ..... அடுத்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாதிக்கும் ஆப்புதான்... ஆனால்...அரபு நாட்டு பிரதிநிதி அழுத்தம் கொஞ்சம் வேலை செய்யலாம் ....இருந்தும் கடாபி இல்லையே ???

  Reply : 0       0

  deen Wednesday, 14 September 2011 04:08 PM

  என்ன இவரது மனதில பெறிய ஹீரோவின் நினப்போ தெரியல் நினப்பு பின்னர் புளப்ப கெடுக்கும் அடாவடித்தன அமைச்சரே ரூபாவாஹினுக்குள் சென்று அடிவாங்கியது கானாதோ.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .