2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ், புத்தளம் நகர சபைத் தவிசாளர் கே.ஏ. பாயிஸை, நேற்று  (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, புத்தளம் நகரை அண்டியுள்ள பகுதிகளின்  பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக, தவிசாளர்  தெரிவித்தார்.

அனர்த்தமுகாமைத்துவம், அபிவிருத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பதற்கு  ஏதுவான விடயங்கள் குறித்து  கலந்துரையாடியதுடன்,  சிங்கி இரால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, மரமுந்திரிகைச் செய்கை போன்றவற்றை தொழில்நுட்ப முறைமையின் கீழ், புதிய  அணுகுமுறைகளைப் புகுத்தி,  அபிவிருத்தி செய்வது எவ்வாறு என்பது பற்றியும் கலந்துரையாடியதாக, அவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .