Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்கள் நீண்ட நாட்பட்ட நோயாளர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதிகளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை, புத்தளம் நகரின் கிராம சேவையாளர் பிரிவுகளில், இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றன.
கிராமசேவகர்கள் வீடு வீடாகச் சென்று, நிதிகளைப் பகிர்ந்தளித்துள்ளனர்.
வயோதிபர்கள், வயோதிபர்களாக இனங்காணப்பட்டு இதுவரை பதிவு செய்யப்படாதவர்கள், விசேட தேவையுடையவர்கள், விசேட தேவையுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளவர்கள், சிறுநீரக, இருதய நோய் போன்ற கடுமையாக சுகவீனமுற்றவர்களுக்கு, இதன்போது கிராம சேவையாளர்களால் தலா 5,000 ரூபாய் நிதி உதவி வழங்ககப்பட்டது.
இதேவேளை, 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதாக கேள்வியுற்ற பொதுமக்கள், அரசால் வசதி அற்றவர்களுக்காக வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் நிதியே கிராம சேவையாளர்களால் வழங்கப்படுவதாக எண்ணி, வீடுகளில் இருந்து வெளியேறி கிராம சேவையாளர் காரியாலயம் செல்ல துவங்கினர்.
எனினும் அவர்களுக்கு சரியான தகவல்கள் கிடக்கப்பெற்றதும் உடனடியாகவே வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர்.
1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025