Editorial / 2022 மே 26 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புத்தளம் அல் சுஹைரியா அரபுக் கல்லூரியின் அதிபர் சலீம்கான் முஹம்மது ஷகீல், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மேல் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் ஷகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டு , கடந்த 2021 செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர், அன்றிலிருந்து பிணை கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026