Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 13 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹிரான் பிரியங்கர ஜயசிங்ஹ
காட்டு யானைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 17 பேரையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ய, புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பந்துல குணரத்தின, இன்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.
புத்தளம் - கிவுல, தங்கஹாவல, கந்தேயாய, அட்டவில்லுவ மற்றும் பலுகஸ்வௌ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனப் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது, புத்தளம் - குருநாகல் பிரதான வீதியை மறித்து, கல்குளம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றிருந்தது. பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த 17 சந்தேகநபர்கள் மீதும், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர்களைப் பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி மீண்டும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .