2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் ஆறுபேருக்கும் விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூலை 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஹிரான் பிரியங்கர, முஹம்மது முஸப்பிர்

இலங்கையின் கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், கைதுசெய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக நீதவான் கேமந்த பேரேரா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், மன்னார் வளைகுடா கடற்பரப்பில் வைத்து, கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து றொலர் இயந்திரம் உட்பட 200 கிலோகிராம் பிடிக்கப்பட்ட மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X