Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷாஜஹான்
முல்லைதீவு ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது அண்மையில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து , நேற்று (4) பிற்பகல் நான்கு மணியளவில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நீர்கொழும்பு ஊடகவியலாளர் அமைப்பு,தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம், கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பு மற்றும் சிவில் சமூகத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
நீர்கொழும்பு ஊடகவியலாளர் அமைப்பினர் இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் மணிக்கூட்டுக்கோபுரம் அருகில் இருந்து சிறிது தூரம் பேரணியாகவும் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .