Niroshini / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் - கொத்தாந்தீவு பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி புனரமைப்பு கூட்டம், நேற்று சனிக்கிழமை (13) மாலை கொத்தாந்தீவு சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கொத்தாந்தீவு பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐ.தே.கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.டீ.அன்ஸார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இதேவேளை, கொத்தாந்தீவு பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி எதிர்காலத்தில் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி, குறிப்பாக கணித பாட வகுப்புகளை மெருகூட்டல் உள்ளிட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

8 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
01 Feb 2026