2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கத்தி குத்தில் கணவன் மனைவி பலி

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த 

மனைவியை கத்தியால் குத்தி கொலைசெய்த கணவன், பின்னர் அதே கத்தியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று, கற்பிட்டி பகுதியில் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவிவித்தனர்.

கற்பிட்டி-தொரடிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36,42 வயதுகளையுடைய கணவன் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனரெனத் தெரிவித்த பொலிஸார், குறித்த இருவருக்கிடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே, கொலைக்கு காரணமெனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .