Niroshini / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பெருவிழாவைச் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லும் முகமாக, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் ஞாயிற்றுக்கிழமை(28) புத்தளம் மாவட்ட இலக்கியவாதிகளை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் இந்த இஸ்லாமிய இலக்கிய பெருவிழா இடம்பெறவுள்ளது.
ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் எம்.எம்.எம்.ஜவாத் மரிக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆய்வகத்தின் தலைவர் டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், செயலாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், பொருளாளர் நாச்சியாதீவு பர்வீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டு கொழும்பில் நடத்தப்படவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பெருவிழாவை சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பது தொடர்பில், தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.


1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago