2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

களஞ்சியசாலைகளுக்கு சீல்

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

தடைசெய்யப்பட்ட வெடி மருந்துப்பொருட்களை மக்கள் நடமாட்டமுள்ள பிரதேசத்தில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலைகள் இரண்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர்.

நீர்கொழும்பு டி குரூஸ் வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவரும் மோரக்குளிய, தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த (வயது 65) என்பவரே  நேற்று சனிக்கிழமை  (23) கைது செய்யப்பட்டவராவார்.

இதேவேளை, சந்தேக நபரினால் டி குரூஸ் வீதியில் வெடிப் பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  களஞ்சியசாலைகள் இரண்டு பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலைகள் இரண்டும் இரசாயன பகுப்பாய்வு அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்காலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பட்டாசு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் எனவும் அந்த வெடி மருந்துகளை மக்கள் நடமாடும் கடைத் தொகுதிகள் உள்ள இடத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், அதற்கென கட்டானை பிரதேசத்தில்  அனுமதியளிக்கப்பட்ட களஞ்சியசாலைகள் உள்ளன எனவும், சீல் வைக்கப்பட்டுள்ள வெடி மருந்து பொருட்களில் பட்டாசு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளுடன் அனுமதியளிக்கப்படாத  வெடி மருந்து வகைகள் இருப்பதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X