Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
காட்டு யானைகளால் சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் மஹக்கும்புக்கடவள பிரதேச மக்களின் உயிர்களையும், விவசாயச் செய்கைகளையும் பாதுகாக்கும் நோக்கில், ஊருக்குள் நுழைந்துள்ள காட்டு யானைகளை விரட்டும் நோக்கில், 12 நாள் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனவிலங்கு திணைக்களத்தின் புத்தளம் பிரிவு அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மஹக்கும்புக்கடவள பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வல்பாளுவ, புனவிட்டிய, கொஹொம்பகஸ்வெவ உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கம் மக்கள் நாளாந்தம் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் (16) ஆரம்பமாகியது. இதுவரை ஐந்து காட்டு யானைகளை தப்போவ காட்டுக்குள் விரட்டியுள்ளதாக, வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், வல்பாளுவ உள்ளிட்ட சிறு காடுகளிலுள்ள சுமார் 10 க்கு மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக, வனவிலங்கு அதிகாரி சஞ்ஜீவ வீரசேகர தெரிவித்தார்.
29 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago