Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் எதனை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிவதே இல்லை. அந்தளவுக்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறான கூடாத பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொண்டுள்ளன.
மாணவியொருவர் தன்னுடைய காதலனின் பிறந்த நாளன்று, ஏனைய மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை வகுப்பறைக்குள் வைத்தே, பியர் பார்ட்டி நடத்திய சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.
அதற்கான அந்த மாணவி, தன்னுடைய வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாவை களவெடுத்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
காதலர்களான மாணவனும் மாணவியும் ஒரே வகுப்பில், தரம் 10 இல் கல்விப்பயிலுகின்றனர். மாணவனின் பிறந்த நாளன்று, வகுப்பறையில் சிறிய வைபவமொன்றை நடத்துவதாக அதிபர், ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் அதிபரும் ஆசியர்களும் அந்த வகுப்பறையை முதலில் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அங்கு பல்வேறு வகையான பலகாரங்கள், இனிப்பு பண்டங்கள் இருந்துள்ளன. அதன்பின்னரே, அங்கு பியர் கேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதனை கேள்வியுள்ள பாடசாலை நிர்வாகம் அந்த பிறந்த நாள் வைபவத்தை இரத்துச் செய்தது. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து, நடந்த சம்பவத்தை தெளிவுப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர், அந்த மாணவ, மாணவிகளுக்கு இரண்டுவார காலம் வகுப்பு தடையையும் விதித்துள்ளனர்.
இந்த சம்பவம் உண்மையென தெரிவித்துள்ள பாடசாலை அதிபர், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
22 minute ago
30 minute ago