2025 மே 02, வெள்ளிக்கிழமை

குத்தகை நிறுவனத்தின் ஊழியர் அடித்துப் படுகொலை

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவணைப் பணத்தைச் செலுத்தாதன் காரணமாக, லொறியொன்றைப் பறிமுதல் செய்வதற்காக, நேற்று(5) காலை சென்ற குத்தகை நிறுவனமொன்றின் ஊழியர்கள் மீது, லொறியின் உரிமையாளர் உள்ளிட்டக் குழுவினர் மேற்கொண்டத் தாக்குதலில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று, மாரவில பொலிஸார் தெரிவித்தார்.

மாரவில ஹல்பன்வில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியைக் கொண்டுச் செல்வதற்கு முற்பட்டபோதே லொறியின் உரிமையாளர் உள்ளிட்ட குழுவினருக்கும் குத்தகை நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வென்னப்புவ, சிலிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஹபன் பேடிக சுதத் பிரசன்ன (வயது45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், குத்தகை நிறுவனத்தில் தவணைப் பணம் செலுத்தாதவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் குழுவில் பணியாற்றி வந்தவர் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X