Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 26 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தனை ரூபசிங்க (39), என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகின்றார்.
குறித்த நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி முகவரியில் தனது தாயாருடன் வசித்து வந்ததாகவும், பின்னர் தனது தாய் பாதிரியார் ஆனதன் காரணமாக இந்த இடத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் வந்து அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த நபரின் சடலம் கிடப்பதை கண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025