2025 மே 15, வியாழக்கிழமை

குப்பைகளைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்து வேட்டை

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு குப்பையை கொண்டு வரும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் மக்களின்  கையெழுத்து வேட்டை இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் நகரிலுள்ள நான்கு ஜும்ஆப்பள்ளிவாசல்களில் இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்த கைழுத்து வேட்டை ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து  இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் பக்கா ஜும்ஆப் பள்ளிவாசல், ஹூதா ஜும் ஆப்பள்ளிவாசல் மற்றும் ஐதுருஸ் ஜும்ஆபள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் இந்த  கைழுத்து வேட்டை இடம்பெற்றது.

இந்த கையெழுத்து வேட்டையில் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டு புத்தளத்துக்கு கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டு வருவதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து தமது கைழுத்துக்களை இட்டுச்சென்றனர்.

பெறப்பட்ட கையெழுத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பவுள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .