2025 நவம்பர் 05, புதன்கிழமை

கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சீன உணவகத்தின் உரிமையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட, வென்னப்புவவையைச் சேர்ந்த மாரசிங்க துஷார சம்பத் பெர்னாண்டோ (வயது 36) என்பவருக்கு, சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜாவினால், செவ்வாய்க்கிழமை (31) மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேற்படி நபர், 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வென்னப்புவ நகரில் வைத்து, கெத்தசிங்க ஆராச்சிலாகே ஜோசப் கிங்ஸ்லி பெர்னாண்டோ என்பரைக் கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இத்தாலி நாட்டுக்குச் தப்பிச் சென்ற நபர், அங்கு நான்கு வருடங்களாக தொழில்புரிந்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பியதுடன் கடந்த ஒருவருடமாக தலைமறைவாகி வாழ்ந்தார்.  

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, அந்நபரை கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X