2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சரணாலய விலங்குகள் வேட்டை| மூவர் மாட்டினர்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்க ஜயசிங்க

புத்தளம், தப்போவ சரணாலயத்திலுள்ள விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்து வந்த மூவரை, புத்தளம் வனவிலங்கு அதிகாரிகள், நேற்று வியாழக்கிழமை (01) கைதுசெய்துள்னர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய 5 கட்டுத்துவக்குகள், ஈய உருண்டைகள் மற்றும் இரும்புத் தகடுகள் போன்றவற்றையும், சந்தேகநபர்களிடமிருந்து அவ்வதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், கருவலகஸ்வௌ - ரஜவிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் நீண்ட காலமாக இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீரைத் தேடி வரும் பன்றி, மான் மற்றும் மரை போன்றவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியை வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்துள்ளார்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X