Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
உலக சூழல் தினத்தை முன்னிட்டு 'வன ஜீவராசிகளைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று, நேற்றுத் திங்கட்கிழமை (06) காலை புத்தளத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் புத்தளம் நகர சபை என்பன கூட்டாக இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தன.
புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்த, புத்தளம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் எம். வன்னிநாயக, புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், சுகாதார பரிசோதகர் எம். சுரேஷ் மற்றும் பாடசாலை மாணவர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
புத்தளம் நகர சபையின் முன்னால் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது புத்தளம் நகர பிரதான சுற்று வட்டம் ஊடாக புத்தளம் - கொழும்பு வீதியில் அமைந்துள்ள கடற்கரைக் கரப்பந்தாட்ட மைதானத்தில் நிறைவடைந்தததோடு, அங்கு முக்கியஸ்தர்களால் நிழல் தரும் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
54 minute ago
1 hours ago