S. Shivany / 2021 மார்ச் 03 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளத்தில் கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை; அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான உரிய இடம் மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளையும் புத்தளம் நகர சபை மூலம் பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளதாக, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நகர பிதா கே.ஏ. பாயிஸ் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களுடையே ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் சுகாதார அமைச்சிடம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்புவோர் தன்னை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026