2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தெங்கு உற்பத்திக்கு உரமானியக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்
அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஊருக்கு ஊர்'  வேலைத் திட்டத்தின் கீழ், புத்தளம் தேர்தல் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தெங்கு உற்பத்திக்கான  உரமானியக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (17) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, தெங்குச் செய்கை சபைத்தலைவர் கபில எக்கடாவல , ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் எம். என்.எம். நஸ்மி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 இதன், முதற்கட்டமாக புத்தளம், முந்தல், கற்பிட்டி, வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தெங்குச் செய்கையாளர்கள்; 500 பேருக்கு ஒரு தென்னை மரத்துக்கு 56 ரூபாய்  வீதம் காசோலைகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக இப்பகுதியில் தெங்கு  உரமானியத்துக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X