2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

இலங்கை மின்சார சபையின் புத்தளம் அலுவலகம் ஏற்பாடு செய்த விஷேட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (18)  காலை புத்தளம் சென். அன்ரூஸ் மத்தியக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில், மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, பாலித்த ரங்கே பண்டார, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி, அசோக பிரியந்த, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால உள்ளிட்ட  பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்காண மக்கள் மின்சாரத்தில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துடன், உடனடியாக தீர்த்து வைக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு திர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X