2021 மே 17, திங்கட்கிழமை

நந்தா பெரேராவுக்கு கௌரவம்

Editorial   / 2017 மே 23 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை, கரந்தகொட மற்றும் ஹேன மரக்கலாவத்த கிராம அதிகாரி பிரிவுகளின் குடும்பச் சுகாதார சேவை அதிகாரியாக 24 வருட காலம் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற திருமதி நந்தா பெரேராவைக் கௌரவிக்கும் வகையிலான சேவைநலன் பாராட்டுவிழா, அண்மையில் நடைபெற்றது. 

கரந்தகொட கெத்தாராம பௌத்த விகாரையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, விகாராதிபதி குருவிட்ட ஞான விசுந்தி தேரர் தலைமை தாங்கினார்.  

எகொடவத்த தாருல் உலூம் பள்ளிவாசல் ஸாவியா சார்பில் நந்தா பெரேராவுக்குத் தங்கப் பவுன் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு, நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.  

பள்ளிவாசல் நிர்வாகி அல்ஹாஜ் எம்.ஜே.எம். ராஸிக் JP மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அல்ஹாஜ் எம்.ஸீ.எம். மிஸ்வர் காஸிம் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .