Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 25 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக்க அருண குமார
நாவுல கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் வன்முறையில் நேற்று (24) இரவு ஈடுபட்டுள்ளனர்.
நாவுல பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கெப் வண்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை நிரப்பச் செல்லும் போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக வைத்திருப்பதற்காக, சங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்காக சுமார் நூறு லீற்றர் எரிபொருள் பெறப்படும் என நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு வரிசையில் நின்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எரிபொருள் நிரப்பிய வண்டியை பயணிக்க விடாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
மேலும், நாவுல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கெப் வண்டிக்கு எரிபொருளுடன் பாதுகாப்பை வழங்கியுள்ளனர் மற்றும் அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். பல்வேறு தரப்பினரின் தொடர் போராட்டத்துக்கு நடுவே, எரிபொருளுடன் கெப் முன்னோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
16 minute ago
22 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
16 minute ago
22 minute ago
26 minute ago