2025 மே 02, வெள்ளிக்கிழமை

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான பஸ் சேவை அவசியம்

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்  

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான மாலை நேர பயணிகள்  போக்குவரத்துச் சேவையினை நடத்துமாறு,  புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்,  இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் முகாமையாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரைத்தீவிலிருந்து குறிப்பாக மாலை நேரத்தில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகைத்தரும் பொதுமக்கள், நோயாளிகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் மாலை 6.00 மணிக்கு, கரைத்தீவுக்குச் செல்வதற்கு பேரூந்து வசதிகளின்றி பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டியுள்ளார்.

இது தொடர்பில் சாதகமான முறையில் பரிசீலிப்பதாகவும் ஓருங்கிணைந்த பஸ் போக்குவரத்து நேர சூசி பயன்பாட்டில் உள்ளதால்,  தனியார் துறையுடனும் கலந்து பேசி மக்களின் தேவையை நிவர்த்திப்பதற்கு உரிய கவனம் செலுத்தப்படுமென,  சாலை முகாமையாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .