Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று, கல்லூரியின் ஏ.எச்.எம்.அஸ்வர் மண்டபத்தில் நேற்று (21) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில்,பிரதான வளவாளராக புத்தளம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பொலிஸ் அதிகாரி கயந்த கலந்து சிறப்பித்தார்.
வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள், போதை ஒழிப்பு செயற்பாட்டில் இளைஞர்களது பங்களிப்பு, பாடசாலை சட்ட திட்டங்களை மதித்தல் மற்றும் கட்டுப்படுதல் தொடர்பான அம்சங்கள் இதன்போது வளவாளரால் அறிவுறுத்தப்பட்டன.
இனிவரும் காலங்களில், பாடசாலை சட்டதிட்டங்களை மீறும் மாணவர்கள் தொடர்பாக, பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது அவர் விளக்கமளித்தார்.
ஆசிரியர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி நிகழ்வின் பிரதான மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார்.
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026