Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்துகுட்பட்ட சின்னப்பாடு, உடப்பு மற்றும் ஆண்டிமுனை, பூனைப்பிட்டி பகுதியிலுள்ள கடற்கரையோரங்கள், நேற்று (22) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு, குறித்த கடற்கரையோரப் பகுதிகள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
பிரதமரும், நிதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையிலேயே, முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னப்பாடு, உடப்பு மற்றும் ஆண்டிமுனை மற்றும் பூனைப்பிட்டி பகுதியிலுள்ள கடற்கரையோரங்களும் நேற்றைய தினம் சிரமதான மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், முந்தல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், புத்தளம் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், உடப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், முந்தல் பொது சுகாதார பரிசோதகர்கள், உடப்பு சுற்று சூழல் பாதுகாப்பு படையணியின் உறுப்பினர்கள், சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து, கடற்கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது, சுற்றுப்புறச் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்வது மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பிலும், சிரமதான நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025