Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஹிரான் பிரியங்கர / 2017 ஜூன் 07 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், ஆனமடுவ, தென்னத்துகுரியாவப் பகுதியில், பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டில் கசிப்பு வடிப்பதாக, இன்று (07) தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
தகவலுக்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டைச் சோதனைக்கு உட்படுத்திய ஆனமடுவப் பொலிஸார், அங்கிருந்து கசிப்புப் போத்தல், ஒரு தொகுதி கோடா பெரல்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
அவ்வீட்டில் நடத்திய மேலதிகத் தேடுதல் நடவடிக்கையில், அலுமாரியில் மிகவும் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரகத் துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன என்று, ஆனமடுவப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உதவிப் பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய போது, இந்தத் துப்பாக்கியை, முன்னாள் அமைச்சர் தமு தஸாநாயக்கவின் வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ளதாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்த பொலிஸார், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
28 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
48 minute ago