2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பெண்ணை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
 

புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வருகை தந்த பெண்ணொருவரை தாக்கிய இருவரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதவான் ஏ.எம்.எம்.எஸ்.அப்துல் காதர் சனிக்கிழமை(17) உத்தரவிட்டார்.
 
புத்தளம் - பாலாவி பிரதேசத்திலிருந்து விசாரணை ஒன்றுக்காக கடந்த சனிக்கிழமை(17) புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த குறித்த பெண்ணை, அதே பிரதேசத்திலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த ஆணொருவரும், பெண்ணொருவரும் இணைந்து குடையொன்றினால் தாக்கியுள்ளனர்.
 
இதையடுத்து, குறித்த பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரையும் புத்தளம் பொலிஸார் சனிக்கிழமை(17) கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட இருவரும், புத்தளம் மாவட்ட பதில் நீதவான் ஏ.எம்.எம்.எஸ்.அப்துல் காதர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X