2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மகனின் தாக்குதலில் தந்தை பலி

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.பிர்தௌஸ்   

அனுராதபுரம் கல்னேவ  பொலிஸ்  பிரிவு,  கறுவலகஸ்வௌ  சேனபுர  பகுதியில், இளைஞரொருவர் தனது தந்தையை கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார் என்று, கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர். 
இச்சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இச்சம்பவத்தில்,  51  வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், அவரது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்றும் வழமைபோன்று, நேற்றிரவும் மதுபோதையில் வந்த குறித்த நபர், மனைவியுடன் சண்டையிட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை, கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை(19)  கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .