2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் கருத்துக்களை பெறுவதற்கான அமர்வு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

நல்லிணக்கச் செயன்முறையில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான மூன்றாவது, நான்காவது அமர்வு 22 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைய, 22ஆம் திகதி திங்கட்கிழமை சிலாபம் புத்தளம் வீதியில் உள்ள இல:118 க்ரவுண் வரவேற்பு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப. 4.30 வரையும் 24 ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப. 4.30 வரையும் இடம்பெறும்.

மேலும், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய இரு மாவட்டங்களிலும் 04 மக்கள் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்கும் போரினால பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினரை இலக்காகக் கொண்டு ஏழு கலந்துரையாடல்களையும் இன்னும் பல துறைசார் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் வடமேல் மாகாண வலய செயலணி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X