Princiya Dixci / 2016 மே 18 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் புத்தளம் மாவட்டத்திலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி, தெரிவித்தார்.
தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதனால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தம்போவ குளத்தின் 14 வான் கதவுகளும் ராஜாங்கன குளத்தின் 24 வான் கதவுகளும், இங்கினிமிட்டிய குளத்தின் 06 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் உள்ள குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளதால் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025