Princiya Dixci / 2016 ஜூலை 10 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர
ஜனாதிபதியின் நிவாரணச் செயற்றிட்டத்தின் கீழ், மதுபாவனையிலிருந்து நாட்டினை மீட்டெடுப்போம் என்ற செயற்றிட்டமானது கற்பிட்டி பிரதேச செயலாளர் காரியாலயம், அரச திணைக்களங்கள் ஒன்றிணைந்து, நேற்று சனிக்கிழமை (09) ஏற்பாடு செய்திருந்தன.
இச்செயற்றிட்டத்தின் கீழ் தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நடைபவனியும் இடம்பெற்றது. இந்நடைபவனியின் போது, வீதி நாடகங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றின் விநியோகம் போன்றச் செயற்பாடுகளும் நடைபெற்றன.
கற்பிட்டி பிரதேச செயலாளர் அலுவலகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனியில், கற்பிட்டி மது ஒழிப்புச் செயற்றிட்டத்தின் கற்பிட்டி பகுதியின் பிரதேச செயலாளர் சதுரங்க ஜயசிங்க, புத்தளம் பொலிஸ் அதிகாரி எஸ்.பி.ரத்னாயக, கற்பிட்டி உதவிப்பொலிஸ் அத்தியட்கர் பிரதிப் உடமல்கல, ஜனாதிபதி காரியாலச் செயற்றிட்டக் குழுவின் உறுப்பினர் எச்.எம்.திலகரத்தின ஆகியோர் கலந்துகொண்டனர். கற்பிட்டி பிரதேசசபை மற்றும் மற்றைய அரச திணைக்களங்களின் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டச்செயற்பாடு நாளை திங்கட்கிழமை(11), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புத்தளம் ஆனந்தாக் கல்லூரியின் விளையாட்டரங்கில் காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்குப் புத்தளம் மாவட்டத்திலுள்ள மதத்தலைவர்கள் மற்றம் புத்தள மாவட்ட அரசாங்க அதிகாரிகள் 3 ஆயிரம் பேரும் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு, போதைப்பொருள் எதிர்ப்புத் தொடர்பிலான செயற்றிட்டங்களில் பங்குபற்றிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago