Princiya Dixci / 2016 நவம்பர் 16 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம், மல்வத்துஒயா நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள், எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் வீரசிங்க தெரிவித்தார்.
இந்த நிர்மாணப் பணிகளுக்காக, 13 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதன்மூலம், 3,000 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கையையும் 6,000 ஏக்கர் மேலதிக பயிர்ச் செய்கையையும் மேற்கொள்வதற்கான நீரை வழங்க முடியுமென, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டார்.
அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வாழும் மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகள் மற்றும் விவசாய ரீதியான நெருக்கடிகளுக்கும், இதன்மூலம் தீர்வு கிடைக்குமென, அவர் தெரிவித்தார்.
தந்திரிமலை உட்பட வடமத்திய மாகாணத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் எதிர்கொள்ளும் வெள்ள அபாயமும், இதன்மூலம் நிவர்த்தி செய்யப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago