2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மஹாவௌவில் டிப்பர் வண்டி விபத்து

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கொழும்பிலிருந்து புத்தளம் அறுவக்காடு கழிவகற்றல் பிரிவுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி நேற்றுமுன்தினமிரவு ஞாயிற்றுக்கிழமை (20)  விபத்துக்குள்ளாகியதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் மஹாவௌ பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை (20) இரவு மஹதவௌ பிரதேசத்தில் மற்றுமொரு பயணித்த டிப்பரின் சாரதி குறித்த டிப்பரை வீதியில் திருப்புவதற்கு முற்பட்ட போது, கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிக் கொண்டு  புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் குறித்த இரண்டு டிப்பர் வண்டிகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த மாரவில பொலிஸார், விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .