Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய கால்வாய்க்குள் விழுந்து சுமார் ஒரு மணித்தியாலம் சிக்கிக் கொண்ட 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் என்று குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மலியதேவ ஆதர்ஷ் மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயிலும் குருநாகல் ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த சசித்ர சேனாரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுக்கு வழிவிடுவதற்காக வீதியோரத்துக்கு சென்றபோது, கால்வாயில் வழுக்கி விழுந்துள்ளார்.
கடும் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கால்வாய்க்கு அருகே புத்தகப் பை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்ட பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago