Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைப்பகுதிக்கு உட்பட்ட மஹலிந்தவேவா, தலவா கால்வாய் பகுதியில், புள்ளிமான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர், நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வில்பத்து தேசிய பூங்காவின், குகுல்கடுவ வனவிலங்கு அலுவலகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பொறிகள் , கத்தி உள்ளிட்ட உபகரணங்களும் புள்ளிமான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, நீதிமன்றில் ஆஜர்படுத்த குகுல்கடுவ வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
33 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago