Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 30 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரியங்கர ஜயசிங்க
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) பிரதேச சபை உறுப்பினர்கள், ஆனமடுவையில் உள்ள வீடமைப்பு அதிகார சபைக்குரிய புத்தளம் மாவட்ட காரியாலயத்தை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.
மொட்டுவைச் சேர்ந்த பிரபல இராஜாங்க அமைச்சருக்கு மட்டுமே வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதாகவும் மாவட்ட முகாமையாளருக்கு எதிராக குற்றஞ்சாட்டினர்.
அலுவலகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த உறுப்பினர்கள், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் டி.என்.பிரியதர்சனவை, ஒரு மணிநேரம் காரியாலயத்துக்குள் தடுத்து வைத்திருந்தனர்.
கடுமையான எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய உறுப்பினர்கள், தாங்கள் எடுத்துவந்த தேங்காய்களை, அலுவலகத்துக்கு முன்பாக சிதறுதேங்காய் உடைத்தனர். “ வீடமைப்பு அதிகார சபையை கைப்பற்றியிருக்கும் பேய், விட்டொழிய வேண்டுமென” கூறியே சிதறுதேங்காய் உடைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
2 hours ago