Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்ற மாதிரிக்கிராம பிரதான வீதியின் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள், புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட பாலாவியில் நேற்று திங்கட்கிழமை (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த பிரதான வீதியின் இரண்டாம் கட்ட நிர்மானப்பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த வீதியின் புனரமைப்பினால் பாலாவி பரிதாபாத், செம்பமடு, மதினாபுரம், மல்லிகாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறவுள்ளனர்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் வடமேல் மாகாண முதலமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதிக்கு கொங்ரீட் இடுவதற்காக முதல் மற்றும் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகளுக்கு 38 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago