Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பிரதான வீதியில், முன்னால் நின்று கொண்டிருந்த யானைக்கு பயந்து பின்நோக்கி சென்ற பஸ், பாதையை விட்டு விலகி, புரண்டு விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த நால்வர் கடுங்காயங்களுடன், ஹம்பாந்தோட்டை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமம்- செல்ல கதிர்காமம் பிரதான வீதியிலேயே இந்தச் சம்பவம், நேற்று 1ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
குருநாகலையிலிருந்து கதிர்காமத்துக்கு உள்ளுர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமந்த பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வரும், கடுங்காயங்களுடன், கதிர்காமம் அரசினர் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம், அம்பாந்தோட்டை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
ஏனைய பயணிகள், சிறு சிறு காயங்களுடன் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வெளியேறினர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago