Freelancer / 2022 ஜூலை 15 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம்- கொழும்பு ரயில் வீதியின் மதுரங்குளி செம்பட்டைப் பகுதியில் நேற்று இரவு ரயிலுடன் ஒருவர் மோதுண்டு மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நேற்றிரவு புத்தளம் நோக்கி வந்த பயணிகள் ரயிலுடன் இவர் மோதுண்டு உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்ந நபர், நிக்கவெரட்டி ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் எதற்காக மதுரங்குளி பகுதிக்கு வருகை தந்தார், எவ்வாறு ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்தார் என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்நவரின் சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர், பிரதே பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago