எம்.யூ.எம். சனூன் / 2017 ஜூலை 02 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கற்பிட்டி, குருநாகல், சிலாவத்துறை, மன்னார், கிண்ணியா, தோப்பூர் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை உடன் நிவர்த்திக்க, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எடுத்த முயற்சிகளுக்கு, தமது நன்றிகளைத் தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
புத்தளம் வைத்தியசாலையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கென, 101 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்வதாகவும் அதில், 30 மில்லியன் ரூபாய்களை உடனடியாக விடுவிப்பு செய்து, ஆறு மாதகாலத்துக்குள் அவசரத் தேவையான பணிகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் தெரிவித்த சுகாதார அமைச்சர், கற்பிட்டி வைத்தியசாலையை, ஒரு மாதகாலத்துக்குள் தரமுயர்த்துவதுடன், வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு, 150 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை, மேற்படி வைத்தியசாலைகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்னை மேற்கொள்ளுமாறு, விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜிதத் சேனாரத்ன, வெகுவிரைவில் இங்கு வருகைததரவுள்ளதாகக் கூறியமையை நினைவுபடுத்திய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 minute ago
42 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
56 minute ago
1 hours ago