2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வடிகான்களை புனரமைத்துத் தாருங்கள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

வீதியோர வடிகான்களை உரிய முறையில் புனரமைத்துத் தருமாறு, புத்தளம் வெட்டுக்குளம் நான்காம் ஒழுங்கை மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அமைப்பாளர் எம்.ஆர்.எம்.அலிசப்ரி ஆகியோரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

புத்தளம் நகர சபைக்குட்பட்ட வெட்டுக்குளம் நான்காம் ஒழுங்கை வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை(21), சென்றிருந்த வேளையிலேயே அவர்கள் இக்கோரிக்கையினை முன்வைத்தனர்.

வீதியோர வடிகான்கள் உரிய முறையில் அமைக்கப்படாமையின் காரணமாக, மழை காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடுவதற்குரிய வசதிகள் இல்லாத நிலையொன்று காணப்படுகின்றது. மழை காலங்களில் இப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன் மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி,

'பிரதேச வீதியோர வடிகான்களைப் புனரமைக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்திற்குள் புத்தளம் மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். புத்தளம் நகரை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்கு வீதியோர வடிகாலமைப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே, வீதிப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கும் அதே நேரத்தில் வடிகாலமைப்பு வசதிகளையும் முன்னெடுப்பதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'. எனத் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X