Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
வீண் வதந்திகளை நம்பி பொது மக்கள் பீதியடையத் தேவையில்லையெனத் தெரிவித்த புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் நகரிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கொரோனா வைரஸ் சம்பந்தமான வீணான வதந்திகளே பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாதெனவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மார்ச் 01 ஆம் திகதிக்குப் பின்னர், வெளிநாடுகளில் இருந்து புத்தளம் பிரதேசத்துக்கு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை மருத்துவத் துறையும் பாதுகாப்பு துறையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார்.
புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ, நாத்தாண்டிய மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில், வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் வன்னாத்தவில்லு, கல்பிட்டி பிரதேசங்களில் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
அத்துடன், கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் புத்தளம் தள வைத்தியசாலையிலிருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். எனினும், அவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்படவில்லை. மருத்துவத்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றுடன் இணைந்து புத்தளம் நகர சபையும் தீர்க்கமான அவதானத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
34 minute ago
40 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
58 minute ago
2 hours ago