Editorial / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் நேற்று (24) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி (வயது 71) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட மேற்படி வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை (22) தொடக்கம் காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் காணாமல் போன குறித்த பெண் புழுதிவயல் களப்புக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று (24) சடமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025