முஹம்மது முஸப்பிர் / 2018 மார்ச் 26 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவ பகுதியில், சிறிய ரக லொறியொன்றில், 288 கிலோகிராம் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை, அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுச் சென்ற நபரை, வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த நபரே, இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, 161 கிலோகிராம் மாட்டிறைச்சியும் 127 கிலோகிராம் பன்றியிறைச்சியும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மீட்கப்படட இறைச்சி தொடர்பிலான பொது சுகாதாரப் பரிசோதகர்களின் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, நடவடிக்கை மேற்கொண்ட வென்னப்புவ பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
35 minute ago
47 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
53 minute ago